முழு ஊரடங்கு இல்லையாம் ஆனா கட்டுப்பாடு வேற லெவல்ல இருக்குமாம்…
தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பரவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதனையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 10000-த்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. சென்னை தவிர செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரவல் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து பேசிய முதல்வர் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை எனவும் கட்டுப்பாடுகள் மட்டும் கடுமையாக்கப்படும் எனவும் கூறினார்.
சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் பேசுகையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்தினார். ஆனால், கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப் படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய கட்டுப்பாடுகளில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் மற்றும் திருமணம் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.