கொரோனா எதிரொலி ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!
கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அதன் எதிரொலியாக வருகிற ஏப்ரல் 27,28,30 தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வு ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ் உட்பட 13 மொழிகளில் ஆண்டுக்கு நான்குமுறை நடைபெறுகிறது.முதல்கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்திலும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மெயின் தேர்வுகள் நடைபெறும்.ஒரே மாணவர் நான்கு முறை இந்தத் தேர்வை எழுதலாம். நான்கு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அந்த மதிப்பெண் இறுதி மதிப்பெண் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்நிலையில் இன்று கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்வுக்கான புதிய தேதியை தேசிய தேர்வு முகமை பின்னர் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.