பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா? – தமிழக அரசு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிளும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
அதன்படி தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட ஒன்று வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் கணக்கிட முடியாதபடிக்கு அதிகரித்து வருவதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கபடுகிறது என்றும், செயல்முறை தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்து எப்போது தேர்வு நடைபெறும் என்று பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.