காவல் துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம்
உடல் நலக்குறைபாடு காரணமாக, இன்று நடிகர் விவேக் காலமானார். சின்ன கலைவாணர் என போற்றப்படும் அவர் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் பல பங்களிப்பை செய்துள்ளார்.
விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி முடித்து அவரது குடும்ப வழக்கப்படி, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து, காவல் துறை மரியாதையுடன் அவருக்கு இறுதிசடங்கு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 72 குண்டுகள் ழுழங்க மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், காவல் துறையினரால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.