தமிழகத்தில் ஒரேநாளில் 9,000 ஐ கடந்த கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,344 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,80,728 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த கொரோனா தொற்றால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.