ஆஸ்கர் நாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!

ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் தயாரித்து, இசையமைத்து, கதை எழுதியுள்ள 99 சாங்ஸ் திரைப்படம் இன்று வெளியானதை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுவரை இசையமைத்து மட்டுமே கொண்டிருந்த இசைப்புயல் ஏஆர் ரகுமான் முதன்முறையாக தயாரித்து, இசையமைத்து, கதை எழுதிய என்ற திரைப்படம் ’99 சாங்ஸ்’. அத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தை பாராட்டி வருகின்றனர்.

நேற்று இரவு சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து இன்று வெளியான ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தை எழுதி, இசை அமைத்து, தயாரித்துள்ள ஏ.ஆர். ரகுமானுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தும் இணைந்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு தனது வாழ்த்தினை அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் ”இன்று ரிலீஸ் ஆகும் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு” என்று தெரிவித்துள்ளார்,.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *