டாஸ்மாக்கிற்கு எதிராக போராட மக்களுக்கு உரிமை உண்டு – உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும், அதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் எதிர்த்து போராட உரிமையுண்டு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமலைக்கூடலில் சில நாள்களுக்கு முன்பு அரசின் சார்பில் மதுபானக் கடை அமைக்கப்பட்டது. டாஸ்மாக் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிலர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து பெண்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும் அதனால் பாதிக்கப்படுபவர்கள், அதற்கு எதிராக போராட முழு உரிமை உண்டு. மேலும் சேலம் கருமலைக்கூடலில் மதுபானக்கடைக்கு எதிராக போராடியவர்கள மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *