மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களை அனுமதித்தால் பாதுகாப்பது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளித்தால் அவர்களை பாதுகாப்பது யார்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி வரும்போது பக்தர்களுக்கு அனுமதி அளித்தால் அவர்களின் பாதுகாப்பு என்ன கேள்வியை முன் வைத்த உயர்நீதிமன்றம் மேலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
சித்திரை திருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சென்னை உயர்நீதி மன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.சித்திரை திருவிழாவின் போது விஐபி பாஸ் மற்றும் சிறப்பு பாஸ் எதற்கும் அனுமதி கிடையாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.