இனி இந்த குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை… அதிரடி சட்டம் பிறப்பித்த பிரான்ஸ்!
பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என அந்த நாட்டு நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 15 வயது நிறைவடைந்தவர்கள் வயதுக்கு வந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இதனையடுத்து அந்நாட்டில் பல குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்தது. இதனை தடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி 15 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் வல்லுறவு மற்றும் கற்பழிப்பு என கருதப்படும் எனவும், அதற்கு தண்டனையாக 20 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நிதியமைச்சர் எரிக் டுபோண்ட் மோரெட்டி, தேசிய சட்டமன்றத்தில் இது எங்கள் குழந்தைகளுக்கும் நமது சமூகத்திற்குமான வரலாற்று சட்டம் என்றும், வீதிகளில் கூட சிறுவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதால் பிரான்சில் இது போன்ற கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.