தோனிக்கு சூப்பரான பாடலை டெடிகேட் செய்த ஏ.ஆர்.ரகுமான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு லலகான்’ என்ற இந்தி திரைப்படத்தில் வரும் ‘சேல் சலோ’ டெடிகேட் செய்ய விரும்புவதாக ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 8 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

இதனையடுத்து ஏ. ஆர். ரகுமான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் லைவ் புரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. அதில் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு  பாடல்களை டெடிகேட் செய்ய போவதாக கூறினார். லாகான் திரைப்படத்திலிருந்து எம்.எஸ். தோனிக்கு ‘சேல் சாலோ’ பாடலை டெடிகேட் செய்ய விரும்புவதாக கூறிய ரகுமான், இது வீரர்களை ஒன்றாக கிரிக்கெட் விளையாட தூண்டுகிறது என்று விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து ரெய்னாவுக்கு ரங்கீலா படத்தில் வரும் ‘மங்தா ஹை க்யா’ என்ற பாடலை டெடிகேட் விரும்புவதாகவும் கூறினார். ஏனென்றால் தான் பெங்களூருக்குச் செல்லும் போதெல்லாம் ரெய்னா இந்த பாடலை நிறைய முறை கேட்டுக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *