பிரபல நகைச்சுவை நடிகருக்கு மாரடைப்பு…மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
தமிழ் சினிமாவில் 30 வருடத்திற்கும் மேலாக நடித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் நடிகர் விவேக் தனது கருத்து நிறைந்த நகைச்சுவைகளால் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.