6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிஎஸ்கே அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் 8 வது ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி வெளியேறினார். அதனைத் தொடந்து 3 வது ஓவரில் கே. எல். ராகுல் ஜடேஜாவல் ரன் அவுட் செய்யப்பட்டார். அதற்கடுத்து கெயில், பூரான், ஹூடா ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓவர்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.