மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகள் கேட்கும் தமிழகம்!

கொரோனா நாட்டில் அதி தீவிரமாக பரவி வருகிறது.இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து மாநிலங்களும் வேகப்படுத்தியுள்ளன.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்ட வருகிறது.தமிழக அரசும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாள்தோறும் போராடி வருகிறது.கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய அரசிடம் தமிழக அரசு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுவரை கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் இந்தியால் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்த இரண்டு தடுப்பூசிகளில் 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும்,5 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க தமிழக அரசு தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் அதிகம் தேவைப்படுவதால் மத்திய அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் வெளிநாடுகளின் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது குறித்து இந்தியா யோசித்து வருகிறது.

தினசரி 7000-க்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.சென்னையில் கொரோனா பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த கூடுதல் தடுப்பூசிகள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *