கொரோனா எதிரொலி… நீட் தேர்வை ஒத்திவைத்தது மத்திய அரசு!

கொரோனாவின் பரவல் இந்தியாவில் வேகமெடுத்துள்ளதைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் படுவேகத்தில் உயர்ந்து வருகிறது. நாட்டில் ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் நடைபெற இருக்கும் பல்வேறு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 18ம் தேதி முதுநிலை நீட்தேர்வுத் நடக்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வரதன் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதில், ”மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு; பிரகாஷ் காரத் 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு….