தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத் தான் உள்ளது – ராதா கிருஷ்ணன்
இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.
மேலும், கொரோனா தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளே தனியாக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் தடுப்பூசியை தகுதியுள்ள அனைவரும் தெரிவித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இன்று, நடிகர் விவேவ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
அதன்பின், நடிகர் விவேக்கும், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விவேக்”கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், “கொரோனா தொற்று பரவுவது அதிகமாகத் தான் உள்ளது. ஆனால், அதற்காக மக்கள் பயப்படக் கூடாது. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசியை தகுதியுள்ள அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியை போட்டுக் கொண்டாலும் கொரோனா பாதிக்கும் தான்.
ஆனால், உயிரிழப்பு ஏற்படாது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது” என தெரிவித்தார்.