தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அரசும் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.மேலும்,தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாளோன்றுக்கு கொரோனா தொற்று 6 ஆயித்திற்கும் அதிகமானோருக்கு பதிவாகி வந்த நிலையில் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 2558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,கோவை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,62,935-ஆக அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக தினசரி பலி எண்ணிக்கை 19 ஆக இருந்த நிலையில் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 4176-பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,91,839-ஆக அதிகரித்துள்ளது.
இது போன்று நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனாவால் அரசு நோயின் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கையை மீறி சென்று விட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞரின் கொரோனா குறித்த தகவலுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் இருக்கிறது எனவும் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.