வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, இரவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை தூங்கிக் கொண்டிருந்த வேலு என்பவரது மனைவி, மகன் மற்றும் மகளைத் தாக்கியது. அவர்கள் அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர்.

பின்னர், அந்த வீட்டிற்குள்ளேயே சிறுத்தையை வைத்து கதவை மூடி விட்டனர். இதனால், சிறுத்தை வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டது. பிறகு, வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் வீட்டிற்குள்ளேயே வைத்து சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டனர். ஆபத்தான விலங்கு என்பதால் மயக்கமருந்து செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

திட்டமிட்ட படி வீட்டிற்கு உள்ளேயே வைத்து மயக்க மருந்து செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *