ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் – தமிழக அரசு

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படும் என்பதால் கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அந்த சமயத்தில் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தனர். இதனால், தமிழக அரசு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளை எட்டு வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.