தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கவனம் தேவை! மக்களுக்கு விவேக் அறிவுறுத்தல்

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் சிக்கி போராடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் வேகம் தீவிரமாக இருப்பதால் அனைத்து மக்களும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பாதுகாப்பு நடைமுறையில் முக்கியமானதாக கைவசம் இருக்கும் தடுப்பூசியை சந்தேகமின்றி தகுதியுள்ள அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசிகளின் மேல் இருக்கும் அச்சத்தைப் போக்குவதற்காக பல்வேறு தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, நடிகர் விவேக் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பின், செய்தியாளர்களைச் சந்தித்த விவேக், “கொரோனா பாதிப்பைத் தடுக்க தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், அதேநேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா வராது என அலட்சியமாக இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *