தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா உறுதி

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் என யாரும் கொரோனா பாதிப்பிற்கு தப்பவில்லை.

நம்நாட்டு சச்சின் முதல் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் வரை கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைத்து பணிகளையும் மெய்நிகர் முறையில் துவங்க உள்ளேன்’ என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். லக்னோ மருத்துவமனையில் அவர் கடந்த வாரம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *