தமிழகத்தில் தொடங்குகிறது மீன்பிடி தடை காலம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் அனைத்தும் முட்டை போட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். எனவே, அந்த கால கட்டங்களில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும்.

மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.அதன்படி, நிகழாண்டு, தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை திருவள்ளூா் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை வைத்து மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் ஃபைபர் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கத் தடையில்லை.

மீன் பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், மீன்வரத்து குறைந்து விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *