இந்தியில் வெளியான சென்னை வானிலை அறிக்கை… கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்!

இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதன்முறையாக இந்தி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் எழுதும் தேர்வுகள் முதல் ரயில் நிலையத்திற்கு பெயர் வைப்பது வரை தமிழை புறக்கணித்து இந்தியை திணித்து வருகிறது. 

சமீபத்தில் சென்னை ஈவெரா பெரியார் சாலையானது வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெயர் பலகையில் அங்கில பெயரை இடம்பெற்ற கருப்பு மைக்கொண்டு அழித்தனர்.

இந்த நிலையில் வழக்கமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறும்  சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு இன்று ஆங்கிலம் தவிர்த்து முதன்முறையாக இந்தி மற்றும் தமிழில் வெளியாகியுள்ளது. இவ்வளவு நாள் வானிலை அறிவிப்பில் இந்தி தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு அன்று ஆங்கிலம் தவிர்த்து இந்தியில் வெளியாகியுள்ளது தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *