மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் அனுமதி!
கொரோனா பரவலின் காரணத்தால் வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும்,திருவிழாக்களுக்கும் தடைவிதித்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்வுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பார்க்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.