பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா!
ஐபிஎல் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை இன்று வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான முதல் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்தில் உள்ளது.இதன்மூலம் இன்றைய போட்டியில் மும்பை வெற்றிக்கணக்கை தொடங்குமா? கொல்கத்தா தனது வெற்றிப் பயணத்தை தொடருமா? என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.