அமெரிக்கா,பிரிட்டன்,ஜப்பானிடமிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் இந்தியா!

கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிப்பதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மத்திய சுகாதரத்துறை ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி அளித்தது.

இன்று அமெரிக்கா,பிரிட்டன்,ஜப்பானிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அனுமதி அளித்துள்ளது.இதன்மூலம் இந்தியாவின் அவசரகாலத் தேவைக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும் 100 பேரை ஒரு வாரம் கண்காணித்து அதன்பின் அதிகமானோருக்கு தடுப்பூசியை செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *