தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் போதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே இருக்கிறது.
இன்று ஒரே நாளில் 6984-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2482 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை தவிர காஞ்சிபுரம்,கோவை,திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 18 பேர் இறந்துள்ளனர்.மேலும்,49000-க்கும் அதிகமானோர் பெருந்தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி அதிகரிக்கும் கொரோனா பரவலால் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.