2000 ரூபாய் போதுமா? மத்திய மாநில அரசுகள் இணைந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் – காளீஸ்வரன்

தமிழக அரசு கொரோனா பொது முடக்கம் அறிவித்த போது, நிறைய பாதிக்கப்பட்டது நாட்டுப்புற கலைஞர்கள் தான். அதன்பின்பும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பின்பற்றபட்டதால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் தற்போது வரை திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் திருவிழா நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் இன்று மதுரையில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்று நாட்டுப்புற கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு ஆணை வெளியிட்டது. அது ஏற்கனவே, பதிவு செய்தவர்களுக்கு மட்டுமல்ல புதிதாக பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பேராசிரியர் காளீஸ்வர் நமது நிரூபருக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், “ இன்று அறிவித்துள்ள நிவாரணம் புதிதாக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே. நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டவர்களைத் தவிர, இன்னும் ஏராளமானோர் சொல்லப்போனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். ஏற்கனவே கொடுக்காமல் விட்ட 6000 பேருக்கு அறிவித்தைத் தான் புதிதாக அறிவித்த மாதிரி அரசு விளம்பரம் செய்கிறது.

மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நாட்டுபுற கலைஞர்களுக்கான நிவாரணத்தை அளித்தால், ஒரு நபருக்கு ஆறாயிரம் வரை கிடைக்கும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *