தமிழகத்தில் இரவு நேர லாக்டவுனா?

தமிழகத்தில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் பலனளிக்கவில்லை எனில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், தினசரி கொரோனா பரவல் பாதிப்பு ஆறாயிரத்தை நெருங்கியுள்ளது.

இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த தலைவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடந்தி வருகிறார். இதில், மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *