நாளை மறுநாள் தொடங்கும் ரமலான் நோன்பு!
இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப்ரல்14) இஸ்லாமியர்களின் 30 நாள் விரதமான ரமலான் தொடங்கப்படும் என்று அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பலநாடுகளிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால் ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இஸ்லாமியர்கள் மசூதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வீடுகளில் இருந்தபடி தொழுகை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.