தமிழக பிளஸ்2 தேர்வு தேதியில் மாற்றம்!

தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மே 3ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 2 தேர்வு மே மாதம் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே 3 தேதி தொடங்கும் தேர்வு 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு பிளஸ்2 தேர்வு தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் வரும் மே 2ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே மே 3ம் தேதி நடக்க இருந்த மொழிப்பாடத் தேர்வு வரும் 31ம் தேதிக்கு  மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னர் அறிவித்தப்படி மற்றத்தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *