கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா? – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’ திரைப்படம் இணையத்தில் வெளியான தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியாக உள்ள படங்களில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்று கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். 7 மாறுப்பட்ட வேடங்களில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இர்பான் பதான் வில்லனாக நடித்து வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள  பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக கோப்ரா படம் ஓ.டி.டி-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து  விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம்,  ’கோப்ரா’ படம் ஓடிடி தளமாக நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுவது தவறு. இது ஒரு பொய்யான செய்தி என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கோப்ரா படத்தில் 95% படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. மீதி 5% பணிகள் பாக்கியுள்ளன. வரும் ஜூலை மாதம் இந்த படத்தை வெளியிட படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *