ஏப்ரல் 14-ல் ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை!

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14-ல் அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவிற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *