அரசு ஊழியர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தமிழக முதல்வர்!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அடுத்த இரண்டு வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களின் வேகம் சீரான வேகத்தில் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 6000 ஐ எட்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.  மக்கள் கொரோனா குறித்து அலட்சியம் காட்டக்கூடாது. தமிழகம் முழுவதும் 261 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளது. அரசு ஊழியர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்கள் தடுப்பூசிக்காக உதவி கேட்கும் பட்சத்தில் அரசு உதவ தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *