ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடைவிதித்தது மத்திய அரசு!

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை அதிகரித்து வரும் நிலையில் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. நவம்பர் மாதத்திற்கு பிறகு கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது இந்தியா உட்படபெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மருந்தின் ஊசியின் மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.