திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பட்டதாரி இளைஞர்கள்!
விசிக தலைவர் திருமாவளவன் பற்றி பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளத்தில் திருமாவளவனுக்கு ஆதரவாக #MyLeaderThiruma என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோகனூரில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 தலித் இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. காவல்துறையினர் இந்த குற்றச் செயலில் ஈடுப்பட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ”தேர்தலின் போது ஏற்பட்ட தகராறு காரணமாகவும், சாதிய பகைமைக் காரணமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை” என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சோகனூருக்கு நேரடியாகச் சென்ற திருமாவளவன், பலியான இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கிருக்கும் மக்களிடம் நடந்தது குறித்து விசாரித்தார். இந்த பிரச்னையை போராட்டம் மூலம் எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் கொலைக்குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்,“ இந்தக் கொலை சம்பவம் குடி போதையில் நடந்தது. சாதிய மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய் தகவலை பரப்புகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
Those who make Vanniyar youth to set fire to Dalit homes are saying educated ppl don't trust Thiruma.
My parents are PhDs & professors. I wasn't interested in studies. It was @thirumaofficial who told me to get a degree, saying education is important (1/2) #MyLeaderThiruma
— meena kandasamy || stand with #palestine 🇵🇸 (@meenakandasamy) April 11, 2021
படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.யாரும் அவருடன் நிற்கவில்லை – அன்புமணி ராமதாஸ்.
நான் S.சதீஸ் https://t.co/HLOXK412AX Electronics
என் தலைவர் திருமா.
நான் அவரது அரசியலை முழுமையாக நம்புகிறேன்!
அவர் பக்கம் நிற்கிறேன்.
💙#istandwiththiruma#MyLeaderThiruma pic.twitter.com/FftWnQFpwu— SathishSelvaraj (@Sathish3889) April 11, 2021
https://twitter.com/lingamvas/status/1381249414354767873?s=20
இதனையடுத்து அன்புமணியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்பு உருவாகியுள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், திருமாவளவனுக்கு ஆதரவு தரும் வகையிலும், சமூக வலைதளங்களில் #MyLeaderThiruma என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “நாங்கள் படித்தவர்கள்’’ என்று கூறி தாங்கள் வாங்கிய பட்டங்களைக் குறிப்பிட்டு, திருமாவளவனை ஆதரிக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.