தமிழகத்தில் ஒரேநாளில் 6000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்6,618பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா குறித்த நிலவரத்தை சுகாதரத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000ஐ நெருங்கிய நிலையில் இன்று அதனை கடந்துள்ளது. இன்று 6,618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேரும் அடங்குவர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,33,4134 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,908 ஆக உயிர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,952 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 41,955 ஆக உள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.