நீட் தேர்வை ஏற்க முடியாது! தமிழக அரசு அறிவிப்பு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், அனைத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நீட் தேர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் தற்போது உள்ள இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்படும். பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவரதன் நடத்திய காணொலி கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.