அரக்கோணம் இரட்டைக் கொலை திட்டமிட்ட படுகொலை! திருமா தலைமையில் போராட்டம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரக்கோணத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இரண்டு இளைஞர்களை அதிமுக மற்றும் பாமக கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து, இரட்டைக் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தொடர்ந்து 4 ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ”அரக்கோணம் இரட்டை கொலை யதார்த்தமாக நடந்தது கிடையாது.
இது திட்டமிட்ட பச்சைப் படுகொலை. இரண்டு கொலைகளுக்கும் நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்.