வாக்காளர்களை சுடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? மம்தா ஆவேசம்

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4 ஆம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் வன்முறை நிகழ்ந்துள்ள நிலையில், இன்றைய தேர்தலிலும் வன்முறை வெடிட்த்து துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளது.

CSIF படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களில் 4 பேர் இறந்துள்ளனர். மேலும், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐந்தாம் கட்ட தேர்தலில் ஈடுபட்டிருந்த மம்தா, “வாக்காளர்களை சுடும் அதிகாரத்தை CSIF வீரர்களுக்கு வழங்கியது யார்? CSIF வீரர்கள் எனக்கு எதிரி இல்லை. உள் துறை அமைச்சகத்தின் பேரில் சதி நடந்து வருகிறது ” என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *