ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி! 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!

தமிழகத்தில் ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு தேர்வுகள் நடத்தி பணிகள் நிரப்பப்படுகிறது. இதில், தேர்வு வாரியத் தலைவராக இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2020 ஆகிய காலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் குளருபடி நடந்திருப்பதால் அதன் தலைவர்களாக இருந்தவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே தவறு திரும்பத் திரும்ப நடைபெறுவதாக புகாரளிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளதால் ஓரிரு நாட்களில் தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ககர்லா உஷா, ஜெகந்நாதன், சீனிவாசன், வெங்கடேஷ், லதா, வியூ நாயர் உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *