மேற்கு வங்கத்தில் பதற்றம்! நான்கு பேர் சுட்டுக் கொலை
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை, மூன்று கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் வன்முறை சம்பவங்கள் நடத்துள்ளன. ஆனால், அவை உயிர்பலி வரை சென்றதில்லை. இன்றைய வாக்குப்பதிவின் போது, ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கூச் பெஹார் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாக கருதப்பட்டதால் அங்கு முன்னேற்பாடாக CISF படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதம் ஏற்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த CISF படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், பொதுமக்களில் 4 பேர் இறந்துள்ளனர்.