விடுமுறை தினங்களில் கடற்கரைகளுக்கு செல்லத் தடை- தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து புதிய கொரோனா கட்டுபாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் இவை அனைத்தும் வரும் 11.4.2021 முதல் நடைமுறைப் படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள கடற்கரை பகுதிகளில் சனி, ஞாயிறு மற்றும் உட்பட அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் செல்ல தடை
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு தடை
- அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி
- கொரோனா காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி , முதல் ஏழு நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி, திரையிட அனுமதி