போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த மியான்மர் ராணுவம்!

மியான்மரில் கடந்த இரண்டு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 19 முக்கிய போராட்டக்காரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அதுமுதல் அங்கு ராணுவத்துக்கும், பொது மக்களுக்கும் இடையே தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.

இதுவரை  நடந்த போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர்  ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் யாங்கன் நகரின் வட ஒக்காலப்பா மாவட்டத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறி 19 போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தில் அறிவுறுத்தலின் பெயரில் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *