தமிழகத்தில் ஒரே நாளில் 6000 – நெருங்கிய கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா குறித்த நிலவரத்தை சுகாதரத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்த நிலையில் இன்று 6000 ஐ நெருங்கியுள்ளது. இன்று 5,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,26,816 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,886 ஆக உயிர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,952 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 37,673 ஆக உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *