தமிழக வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு என தேர்தல் ஆணையம் வெளியிடும்.

அதன்படி, ஏப்ரல் 7 ஆம் தேதி காலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தமிழகத்தில் மொத்தம் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று புதிய புள்ளிவிவரங்களை சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மொத்தம் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *