திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமருக்கு வைரமுத்து வேண்டுகோள்

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், சென்னையில் இருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும் இதில் இரண்டு சிலைகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விஜிபி ரவிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், இந்த நிகழ்வில் வைரமுத்து பேசிய போது, “குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டும்போது மகிழ்ச்சியடைகிறோம் என்றும், தமிழன் என்று பெருமை கொள்கிறோம் எனவும் கூறிய வைரமுத்து, ஒட்டுமொத்த தமிழ் இனமும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருக்குறளை யாருமே அங்கீகரிக்காத நிலையிலும், இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது, திருக்குறள் அதிகாரத்தைக் காப்பாற்ற ஆசைப்படவில்லை. அறத்தைக் காப்பாற்றவே ஆசைப்படுகிறது. இப்படிப்பட்ட திருக்குறளை ஏன் தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

முதலில் ட்வீட் போட்டது திருவள்ளுவர் தான் என்றும், இன்றைய ட்விட்டருக்கு மூலம் திருவள்ளுவர்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *