தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகள் தீவிரம்
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தந்த மாநிலங்கள் தனித்தனியாக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
நேற்று முதல் தமிழ்நாட்டிலும் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா கட்டுப்பாடுகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன் அறிவித்துள்ளார்.
அதில், “புதுச்சேரியில் அதிகளவில் மக்கள் கூட, திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை கரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆட்டோ மற்றும் வாடகைக் காரில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறைந்த அளவிலான நபர்களே பங்கேற்க வேண்டும்.
கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.பேருந்துகளில் அதிகளவிலான பயணிகள் அனுமதிகக்கக் கூடாது.முகக்கவசம் அணியாமல் பொதுவிடங்களுக்கு வருவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.