கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை!
அண்மையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். ஆனால் பசுமை தீர்ப்பாய விதிகளின்படி பசுமை தீர்ப்பாயத்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே நிபுணர் குழு உறுப்பினராக முடியும்.
இதனால், கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்தை தடை செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணையில் கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, முறையான விளக்கம் அளிக்கவும், அதுவரை கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.