கூடுதல் கட்டுப்பாடுகள் வரலாம்! தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு முறைகள் பலனளிக்க வில்லை என்றால் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பொது மக்களின் நலன் கருதி இரவு நேர ஊரடங்குகள் விதிக்கப்படலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 14 முதல் 16 வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *