மாமல்லபுரத்தில் தனியார் சொகுசு விடுதியை இடிக்க ஆணை – தேசிய பசுமை தீர்ப்பாயம்

மாமல்லபுரத்தில் தனியார் சொகுசு விடுதியை இடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,ரூ.10 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலோர சீர்திருத்த விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக நிரூபணம் ஆன நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதி நிர்வாகமே கட்டிடத்தினை இடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அதற்காக 2 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதனை மீறும் பட்சத்தில் அரசு விடுதியை இடிக்கும் பணியை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *